காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா கலந்துரையாடல்
by Bella Dalima 15-05-2018 | 9:24 PM
Colombo (News 1st)
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று கலந்துரையாடினார்.
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இங்கு வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது தெரிவித்துள்ளதுடன், மனித உரிமை செயற்பாட்டாளரான ஜஸ்மின் சூகாவும் அதை வலியுறுத்தியுள்ளார்.