இன்டர்நெட் இல்லாமலும் ஜிமெயிலை பயன்படுத்தலாம்

இன்டர்நெட் இல்லாமலும் ஜிமெயிலை பயன்படுத்தலாம்

by Bella Dalima 15-05-2018 | 4:07 PM
கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், ஜிமெயிலின் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கு அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் (Offline Support) ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுவது போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.