பிரபாஸுடன் இணையும் அருண் விஜய்

பிரபாஸுடன் இணையும் அருண் விஜய்

பிரபாஸுடன் இணையும் அருண் விஜய்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2018 | 11:25 am

ஜித் இயக்கத்தில் பிரபாஸ் – ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பு டுபாயில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அருண் விஜயும் படக்குழுவில் இணைந்துள்ளார்.

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார், சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், அருண் விஜயும் தற்போது இணைந்திருக்கிறார். அருண் விஜய் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்