தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்

தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்

தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2018 | 4:40 pm

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் அடைத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான இந்த விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து நடிகர் – நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

குழந்தை கடத்தல் மற்றும் அவர்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உலக அளவிலான பிராண்ட் அம்பாஸிடராக இருக்கும் மல்லிகா ஷெராவத், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் ஒரு விடயத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் செய்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் இடத்தில், தன்னைத்தானே ஒரு இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் கலந்துகொள்வது இது 9 ஆவது வருடம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இது மிகச்சிறந்த இடம் என நினைக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் எங்காவது ஒரு பெண் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். இதில், இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே, என்னால் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைக்கிறேன்

என தெரிவித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்