by Staff Writer 15-05-2018 | 8:50 AM
COLOMBO (News 1st) 2014 ஆம் ஆண்டு, இடம்பெற்ற காஸா போருக்கு பின்னர், அப்பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மோதலில் 2,700 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறப்பதற்கான நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்கா நேற்று தனது தூதரகத்தை கோலாகலமாக திறந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.