15 பேரின் மரணத்திற்கு காரணமான வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டது

15 பேரின் மரணத்திற்கு காரணமான வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டது

15 பேரின் மரணத்திற்கு காரணமான வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2018 | 4:07 pm

Colombo (News 1st) 

தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு வைரஸ் தொற்றுகள் காரணமாக இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

பொரளை மருத்துவ ஆய்வு நிருவகத்தால் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

குறித்த வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 150 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.