பஸ் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

பஸ் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

பஸ் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 11:26 am

COLOMBO (News 1st) எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பஸ் கட்டணத்தில் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப திருத்தம் மேற்கொள்வதற்கு இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

இது வரைக்காலமும் நடைமுறையில் இருந்த விலைச்சூத்திரத்திற்கேற்ப பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்றைய கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் இணக்கம தெரிவித்தததாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கிணங்க விலைச்சூத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த விலைக்கே தமக்கு டீசலை வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்