இந்தியாவில் புழுதிப் புயலினால் 61 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் வீசிய புழுதிப் புயலில் சிக்கி 61 பேர் உயிரிழப்பு

by Staff Writer 14-05-2018 | 2:42 PM
COLOMBO (News 1st) இந்திய தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய புழுதிப் புயலில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் புழுதிப்புயல் வீசியதை அடுத்து, சென்னையில் இருந்து பயணிக்கவிருந்த 2 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே 20 மாநிலங்களில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது டெல்லி, அரியானா, உத்திரபிரதேசத்தில் புழுதிப்புயல் மேலும் 3 நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திர பிரதேஷ் மாநித்தில் 12 பேரும் மேற்கு வங்கத்தில் 9 பேரும் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது. உத்திர பிரதேஷ், மேற்குவங்கம், ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்தி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.