தூதுவர்கள் நியமனம் எப்போது?

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தூதுவர்கள் நியமிக்கப்படுவது எப்போது?

by Staff Writer 14-05-2018 | 9:39 PM
COLOMBO (News 1st) ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக வௌிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு 9 மாதங்களாக தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு மூன்று மாதங்களாக வெற்றிடம் நிலவுகின்றது. மற்றுமொரு பிரபல இராச்சியமாக கருதப்படும் ரஷ்யாவுக்கும் கடந்த மூன்று மாதங்களாக தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு பத்திற்கும் அதிகமான நாடுகளுக்கு வௌிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். 2017 ஜனவரி 16 ஆம் திகதி பிரதமரின் சுவிட்சர்லாந்து விஜயம். 2017 பெப்ரவரி 13 ஆம் திகதி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் அவுஸ்திரேலியா பயணமானார். 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 2017 ஏப்ரல் 10 ஆம் திகதி பிரமதர் ஜப்பானுக்கான விஜயம் மேற்கொண்டார். அதே வருடம் ஏப்ரல் 16 ஆம் திகதி பிரதமர் வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டார். 2018 மார்ச் 11 ஆம் திகதி சர்வதேச சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். 2018 மார்ச் 12 ஆம் திகதி ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டார். கடந்த 18 ஆம் திகதி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். 2018 மே 12 ஆம் திகதி 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானுக்கு சென்றுள்ளார். https://www.youtube.com/watch?v=3qEph12wsos