முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழில்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 8:34 pm

COLOMBO (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழ். மாவட்டத்தில் இன்று இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வின், முதற்கட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் மகாவித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 22 மாணவர்கள் உயிரிழந்தமையை நினைவுகூர்ந்து சுடரேற்றப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சுழிபுரத்திலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்திற்கு அருகில் இரண்டாம் கட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பிற்பகல் இடம்பெற்றன.

மேலும் யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் வார நிகழ்வுகள் நடைபெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்