மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் அல்லலுறும் மலையக மக்கள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் அல்லலுறும் மலையக மக்கள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் அல்லலுறும் மலையக மக்கள்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 7:19 pm

COLOMBO (News 1st) மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு, தோட்டப்புற மக்களின் வாழ்வியலையும் பெரிதும் பாதித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் பலரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

44 ரூபாவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 57 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 101 ரூபாவாக உயர்வடைந்துள்ளமையால் தோட்டப்புற மக்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டப்புறங்களில் விறகு அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டே அடுப்பு எரிக்கப்படுகிறது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு நீடிக்கும் பட்சத்தில் அது தம்மை மேலும் பாதிக்கும் என இவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நிலுவைச் சம்பளமும் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டுள்ள தமக்கு இந்த சுமையை சமாளிக்க முடியாதுள்ளதாக தோட்டப்புற மக்கள் கூறுகின்றனர்.

தோட்டப்புறங்களிலுள்ள சிறு கடைகளின் உரிமையாளர்களும் இந்த விலை அதிகரிப்பினால் அல்லலுறுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்