மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 1:24 pm

COLOMBO (News 1st) மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

மண்ணெண்ணெய் விலையை குறைக்க கோரியும் மானியம் வழங்குவதாயின் சரியான திட்டமிடலுடன் வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமது இயந்திரப் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி அவற்றில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும் கவனயீர்பை முன்னெடுத்தனர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள சிலாபம் அராச்சிக்கட்டு, முந்தல், கல்பிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களே கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்