தபால் இணையத்தள சேவை நாளை முதல் வழமைக்கு

தபால் இணையத்தள சேவை நாளை முதல் வழமைக்கு

by Staff Writer 14-05-2018 | 11:54 AM
COLOMBO (News 1st) இணையத்தள சேவையில் ஏற்பட்ட பிர்சசினையை நாளை முதல் வழமைக்கு கொண்டு வர முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நிபுணர்கள் மூலம் குறித்த பிரச்சிணை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோகண அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலமையை சீர்செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும குறிப்பிட்டார். இணையத்தள கட்டமைப்பில் உள்ள பிரச்சினையே கண்டறியப்பட்டுள்ளது . இந்த பிரச்சினைக்கு இடை இடையே தீர்வு பெற்றாலும் அது பலனளிக்கவில்லை எனவும் எனவே நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் தெரிவித்தார். அடுத்த வாரமளவில் இந்த நிலை முழுமையாக சீர்செய்யப்படும் என அவர் மேலும் கூறினார்.  

ஏனைய செய்திகள்