ஜனாதிபதி மற்றும் ஈரான் ஆன்மீக தலைவருக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் ஈரான் ஆன்மீக தலைவருக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் ஈரான் ஆன்மீக தலைவருக்கிடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 8:38 pm

COLOMBO (News 1st) ஈரானுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அந்நாட்டு ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்துள்ளார்.

ஈரானின் தெஹ்ரான் நகரில் நேற்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நீண்ட காலம் தொட்டு தொடரும் இலங்கை மற்றும் ஈரானுக்கிடையிலான தொடர்புகளை தொடர்ந்தும் வலுவாக முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் அதேபோன்று இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவின் அவசியம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்டு மக்களினதும் விழுமியங்களில் சமநிலை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது புரிந்து கொண்டதாக ஈரான் ஆன்மீக தலைவர் அயத்துல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானின் தெஹ்ரானில் வாழும் இலங்கையர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பில் தௌிவுபடுத்திய ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்