பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 14-05-2018 | 12:09 PM
COLOMBO (New 1st) சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய கலுவெலகொட பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தேகநபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேகநபர் உயிரழந்துள்தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.  

ஏனைய செய்திகள்