ஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம்  தீர்வு

ஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம்  தீர்வு

ஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம்  தீர்வு

எழுத்தாளர் Staff Writer

14 May, 2018 | 2:26 pm

COLOMBO (News 1st) பல வருட காலமாக குடிநீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த ரம்புக்கன ஈரியகொல்ல பகுதி மக்களுக்கு இன்று மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

ரம்புக்கண ஈரியகொல்ல பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர் இன்மையால் இந்தப்பகுதி மக்கள் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்குள்ளாகி இருந்தனர்.

இந்தத்திட்டத்திற்கு மக்கள் சக்தியுடன் டாக்டர்களான மனேகா பிரிட்டோ ,ஷானக பெரேரா மற்றும் ஷமேந்திரி தலபாவில ஆகியோரும் கைகோர்த்திருந்தனர்.

16 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கம் பெற்றுள்ள இந்தத் திட்டம் இன்று காலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்