28 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

by Bella Dalima 12-05-2018 | 3:39 PM
Colombo (News 1st)  பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 28 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேவை கருதி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேரும், 6 தலைமை இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர். அத்துடன், 15 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.