ஈரானுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஈரானுக்கு பயணமானார் ஜனாதிபதி

by Bella Dalima 12-05-2018 | 7:00 PM
Colombo (News 1st)  ஈரான் ஜானாதிபதி ஹசன் ரௌஹானியின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஈரானுக்கு பயணமானார். இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் ஈரானின் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தவுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.