தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் தீ பரவல்

இரத்மலானையில் உள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் தீ பரவல்

by Bella Dalima 12-05-2018 | 6:00 PM
Colombo (News 1st)  இரத்மலானை - பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் இன்று தீ பரவியது. களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கு 2 மணித்தியாலங்கள் சென்றுள்ளன. தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டன. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.