மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கும் அவரது மனைவிக்கும் நாட்டிலிருந்து வௌியேறத் தடை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கும் அவரது மனைவிக்கும் நாட்டிலிருந்து வௌியேறத் தடை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கும் அவரது மனைவிக்கும் நாட்டிலிருந்து வௌியேறத் தடை

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 4:43 pm

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கும் அவரது மனைவிக்கும் நாட்டிலிருந்து வௌியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது குடும்பத்தாருடன் இன்று வௌிநாட்டிற்கு சுற்றுலா செல்லவுள்ளதாக நஜிப் ரசாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் முன்னாள் பிரதமருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மோசடி செய்ததாக நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற பொதுத்தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வியடைந்ததுடன், புதிய பிரதமராக 92 வயதான மஹதிர் மொஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை மீள பறிமுதல் செய்யவுள்ளதாக புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்