by Bella Dalima 12-05-2018 | 3:45 PM
Colombo (News 1st)
புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் பகுதிகளில் 2 முதல் 2.5 மீட்டர் வரையில் கடல் அலை உயரக்கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், ஆழ்கடல் அலையின் வேகத்தால் கரையோர பகுதிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.