நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2051 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2051 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2051 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 4:28 pm

Colombo (News 1st) 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2,051 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, நேற்றிரவு 11 மணி தொடக்கம் இன்று அதிகாலை 3 மணி வரை சுமார் 4 மணித்தியாலங்கள் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்ட 151 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்