காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் சந்திப்பு

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் சந்திப்பு

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 7:33 pm

Colombo (News 1st) 

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு மன்னாரில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களான ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹான் பீ பீரிஸ், கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சட்டத்தரணி சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்விற்கு ஊடகங்களை அனுமதித்தால் மாத்திரமே நிகழ்வில் கலந்துகொள்வதாகக் கூறி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கோரிக்கையை அடுத்து, நிகழ்வினை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்