எமது கட்சிக்கு தலைமை வகிக்கத் தகுதியானவர் கோட்டாபய ராஜபக்ஸ: W.D.J. செனவிரத்ன

எமது கட்சிக்கு தலைமை வகிக்கத் தகுதியானவர் கோட்டாபய ராஜபக்ஸ: W.D.J. செனவிரத்ன

எமது கட்சிக்கு தலைமை வகிக்கத் தகுதியானவர் கோட்டாபய ராஜபக்ஸ: W.D.J. செனவிரத்ன

எழுத்தாளர் Bella Dalima

12 May, 2018 | 8:06 pm

Colombo (News 1st) 

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் W.D.J. செனவிரத்ன இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எமது கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கத் தகுதியான ஒருவர் உள்ளார். அது கோட்டாபய ராஜபக்ஸ என்பதை அம்பிலிபிட்டியவில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் நான் கூறியிருந்தேன். இது தொடர்பில் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், பல மணித்தியாலங்கள் என்னுடன் விவாதித்த தலைவர்கள் இன்று இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.​ அரசாங்கத்தில் இருந்து நான் வௌியேறியுள்ளேன். எனினும், கட்சியில் இருந்து வௌியேறவில்லை. கட்சி என்ற போர்வையில் எதிரணிகளைப் பலப்படுத்த முடியாது. இரண்டு வாரங்களில் நாம் இறுதித் தீர்மானத்தை எடுப்போம். அதனை எம்மால் செய்ய முடியாவிடின் தனித்து பயணிப்போம்.

என W.D.J. செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எண்ணமுள்ளதா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஸவே தீர்மானிக்க வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஸ பதிலளித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்