இராஜாங்க அமைச்சராக A.H.M. பௌசி பதவிப்பிரமாணம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக A.H.M. பௌசி பதவிப்பிரமாணம்

by Bella Dalima 11-05-2018 | 3:28 PM
Colombo (News 1st)  தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக A.H.M. பௌசி இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரெக்கவ, ஊவா மாகாண ஆளுநராக இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.