by Bella Dalima 11-05-2018 | 4:49 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என நம்பப்படுகிறது.
இது தொடர்பான தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவை அடிக்கல் நாட்டும் விதமாக இந்தச் சந்திப்பு அமையக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.