உதயங்க வீரதுங்கவின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

உதயங்க வீரதுங்கவின் அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

by Bella Dalima 11-05-2018 | 3:09 PM
Colombo (News 1st)  தம்மைக் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள பிடியாணையை மீளப்பெறுமாறு கோரி ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமது வங்கிக்கணக்கை தடை செய்துள்ள உத்தரவை இரத்து செய்யுமாறும் பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிசிடம் 10 கோடி ரூபா இழப்பீடு கோரியும் உதயங்க வீரதுங்க இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.