அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார நியமனம்

by Bella Dalima 11-05-2018 | 5:20 PM
  Colombo (News 1st)  அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் செயலணியின் பிரதானி கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பியசேன திசாநாயக்க ஆகியோர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் உடனடியாக சேவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டார். அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.