நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

by Bella Dalima 10-05-2018 | 4:42 PM
Colombo (News 1st)  கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தலைநகரின் பல இடங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 148 ரூபாவாகும். லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் பழைய விலைக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டி ஏற்பட்டமைக்கான காரணத்தை அமைச்சர் தௌிவுபடுத்தினார்.   அதனைக் காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்