மலேசியாவில் 60 வருடங்களாக நீடித்த தேசிய கூட்டணி ஆட்சி முடிவிற்கு: மஹதிர்  தலைமையிலான கூட்டணி வெற்றி

மலேசியாவில் 60 வருடங்களாக நீடித்த தேசிய கூட்டணி ஆட்சி முடிவிற்கு: மஹதிர் தலைமையிலான கூட்டணி வெற்றி

மலேசியாவில் 60 வருடங்களாக நீடித்த தேசிய கூட்டணி ஆட்சி முடிவிற்கு: மஹதிர் தலைமையிலான கூட்டணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 May, 2018 | 7:52 am

மலேசிய பொதுத் தேர்தலில், முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி 115 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

60 வருடங்களாக நீடித்த தேசிய கூட்டணி ஆட்சி இந்தத் தேர்தலூடாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஆட்சியமைப்பதற்கு 112 ஆசனங்களைப் பெற வேண்டிய நிலையில், மொஹைதிர் மொஹமட் கூட்டணி, 115 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உலகின் வயது முதிர்ந்த தலைவராக மஹதிர் மொஹமட் வரலாற்றில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

92 வயதான மஹதிர் மொஹமட், 60 வருடங்களாக நீடித்த தேசிய கூட்டணி ஆட்சியை இந்தத் தேர்தலூடாக முடிவிற்குக் கொண்டுவந்துள்ளார்.

பழிவாங்கல் முயற்சியில் ஈடுபடாது, சட்டம் ஒழுங்கை மீளமைக்கவுள்ளதாக தேர்தல் வெற்றியின் பின்னர்
மஹதிர் மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதுடன், இன்று மற்றும் நாளை தேசிய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் 13 மாநிலங்களில் 12 இலுள்ள மக்களின் வாக்குகளினால், பாராளுமன்றத்திற்கு 222 உறுப்பினர்கள் தெரிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்