English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
10 May, 2018 | 8:36 pm
Colombo (News 1st)
ஹப்புத்தளை – கல்கந்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
ஹப்புத்தளை – கல்கந்த தோட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கடந்த 6 ஆம் திகதி மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் E.L.M.உதயகுமார தெரிவித்தார்.
கல்கந்த தோட்டத்தில் வசித்து வந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் இடம்பெயர்ந்து கல்கந்த, இலக்கம் 2 வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் E.L.M. உதயகுமார குறிப்பிட்டார்.
01 Jun, 2022 | 08:45 PM
01 Feb, 2022 | 06:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS