பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்

பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்

பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2018 | 8:07 pm

Colombo (News 1st) 

பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாக தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான இந்த வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்து கொண்டிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தான் பார்வையாளராக இருக்க முடியாது என சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், எல்லோருக்கும் இருக்கக்கூடிய சிறப்புரிமை தமக்கும் இருப்பதாக வலியுறுத்திக் கூறினார்.

இதன்போது, நேரத்தை வழங்கும் உரிமை தமக்கில்லை என குறிப்பிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரிடம் தாம் நேரத்தை ஒதுக்கிக்கொடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்