நெய்மருக்காக 4 முன்னணி வீரர்களை வெளியேற்றத் தயாராகும் ரியல் மெட்ரிட்

நெய்மருக்காக 4 முன்னணி வீரர்களை வெளியேற்றத் தயாராகும் ரியல் மெட்ரிட்

நெய்மருக்காக 4 முன்னணி வீரர்களை வெளியேற்றத் தயாராகும் ரியல் மெட்ரிட்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2018 | 4:26 pm

நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மெட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மெட்ரிட். அதேபோல், பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மெட்ரிட்டிற்கு முக்கிய போட்டியாளர் பார்சிலோனாதான்.

பார்சிலோனா அணியில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் விளையாடிக் கொண்டிருந்தார். அவரை வாங்குவதற்கு ரியல் மெட்ரிட் விரும்பியது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்ததால் நெய்மர் பிஎஸ்ஜி-க்கு சென்றார். கால்பந்து கிளப் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனார்.

பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் 30 போட்டியில் 20 கோல்கள் அடித்தார். தற்போது நெய்மர் ரியல் மெட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். ரியல் மெட்ரிட் அணியும் அவரை வாங்க விரும்புகிறது. நெய்மர் வேண்டுமென்றால் ரியல் மெட்ரிட் ஏராளமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

இதை சரிகட்டும் வகையில் காரேத் பெலே, கரின் பென்சிமா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், இஸ்கோ ஆகியோரை 1745 மில்லியன் பவுண்ட் அளவிற்கு விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெய்மர் ரியல் மெட்ரிட் அணிக்கு வந்தால் நீண்ட காலமாக அந்த அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்