இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை: ரஜினிகாந்த் தீர்மானம்

இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை: ரஜினிகாந்த் தீர்மானம்

இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை: ரஜினிகாந்த் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2018 | 3:43 pm

இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தன் மகள் வயதில் இருக்கும் நடிகைகளுடன் இனி நடிக்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு அரசியல் படம் மீது விருப்பம் இல்லை என்றும், சமீபத்தில் அரசியல் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காலா’வில் அரசியல் உள்ளது. ஆனால், இது அரசியல் படமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலா பட பாடல்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்