கடற்படையினர் வசமுள்ள காணி தொடர்பில் கயந்த கருத்து

இரணைத்தீவில் 6 ஏக்கர் 52 பேர்ச்சர்ஸ் காணியே கடற்படையினரின் வசமுள்ளது - கயந்த கருணாதிலக்க

by Staff Writer 10-05-2018 | 1:21 PM
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்திருந்த கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சு சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதிலளித்தார்.
டக்ளஸ் தேவானந்த இரணைத்தீவிலிருந்து வௌியேறியுள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் குடியேற்றுவதற்கு சட்டரீதியாக எப்போது அனுமதி வழங்கப்படும் கயந்த கருணாதிலக்க இரணைத்தீவு மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற காலப்பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிக்கும் காலப்பகுதியில், அங்கு சென்று நிரந்தரமாக நிர்மாணங்களை அமைக்காது கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரணைத்தீவில் 400பேர் வரையில் தங்கியுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் 2018 மே மாதம் நான்காம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரணைத்தீவில் ஆறு ஏக்கர் 52 பேர்ச்சர்ஸ் காணி மாத்திரமே கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.