உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியல்

2018 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியல்

by Bella Dalima 09-05-2018 | 4:46 PM
2018 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இரண்டாமிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மேர்கல் நான்காவது இடத்திலும், அமேசன் நிறுவனர் ஜெப் பிசோஸ் ஐந்தாவது இடத்திலும், போப் பிரான்ஸிஸ் ஆறாவது இடத்திலும் உள்ளனர். பில் கேட்சுக்கு ஏழாவது இடமும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எட்டாவது இடமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது. மற்ற முக்கிய உலகத் தலைவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 12 ஆவது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் 13 ஆவது இடத்திலும் உள்ளனர். பிரித்தானிய பிரதமர் தெரசா மே 14 ஆவது இடத்திலும் இந்தியாவின் முகேஷ் அம்பானி 32 ஆவது இடத்திலும் உள்ளனர்.