கணக்காய்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானது

தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானது - சபாநாயகர்

by Staff Writer 09-05-2018 | 2:16 PM
COLOMBO (News 1st) தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது அல்லவென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தாம் வௌியிட்ட அறிவிப்பினால் தவாறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபாநாயகர் முன்னதாக இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என தவறாகத் தெரிவித்திருந்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டது.