அமெரிக்க தாதிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

அமெரிக்க தாதிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 09-05-2018 | 8:52 PM
Colombo (News 1st)  திருகோணமலை - உப்புவௌி பகுதியில் அமெரிக்க தாதிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறையை சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அமெரிக்க மருத்துவக் கப்பலில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இரண்டு தாதியர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த சந்தேகநபர் முயன்றுள்ளார். தாதியர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் உப்புவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.