மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2018 | 7:10 am

COLOMBO (News 1st) நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.

உரிய நேரத்தில் மாத்திரம் சேவையாற்றுதல் உரிய பாதுகாப்பு நடவடிக்கை இன்றி சேவையாற்றுவதில் இருந்து விலகுதல் ,திடீர் அழைப்புகளுக்கு ஏற்ப சேவைக்கு வருகை தராமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த பணிப்பகிஷ்கரிப்பினுள் உள்ளடங்குகின்றன.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின்சார சபையின் நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்