மன்னாரில் விவசாயக் காணியில் வீட்டுத்திட்டம்

விவசாயக் காணியில் வீட்டுத்திட்டம்: கொக்குப்படையான் கிராம மக்கள் குற்றச்சாட்டு

by Bella Dalima 08-05-2018 | 8:35 PM
Colombo (News 1st)  தமக்கு சொந்தமான விவசாயக் காணியில் சட்டவிரோதமான முறையில் வீட்டுத்திட்டமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மன்னார் - கொக்குப்படையான் மக்கள் குற்றஞ்சாட்டினர். மன்னார் - முசலி - கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் விவசாயக் காணியில் வீட்டுத்திட்டமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த சனிக்கிழமை (05) நாட்டப்பட்டதாக மக்கள் கூறினர். இந்த வீட்டுத்திட்டத்தில் வேறு பகுதியைச் சேர்ந்த மக்களைக் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொக்குப்படையான் கிராம மக்கள் சுட்டிக்காட்டினர். குறித்த வீட்டுத்திட்டத்தை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கொக்குப்படையான் மக்கள் முசலி பிரதேச செயலாளரிடம் இன்று மகஜர் ஒன்றைக் கையளித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச செயலாளர், காணி அதுகாரிகளுடன் காணியைப் பார்வையிட்டுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ். வசந்தகுமாரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. குறித்த காணி தொடர்பில் தான் ஆராய்வதாகவும் அதுவரை இந்த திட்டத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் முசலி பிரதேச செயலாளர் கூறினார்.