வன்னிச்சமர் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

வன்னிச்சமர் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

வன்னிச்சமர் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2018 | 9:44 pm

Colombo (News 1st) 

வட மாகாணத்தில் பாடசாலை மகளிர் மட்டத்தில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடினப் பந்து கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

வன்னிச்சமர் மகளிருக்கான முதலாவது கடினப் பந்து கிரிக்கெட் போட்டியில் வவுனியா இந்து மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரிகள் விளையாடுகின்றன.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இந்துக் கல்லூரி அணியின் தலைவியாக கே.டிலக்ஸனி செயற்படுகிறார்.

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணியின் தலைமை பொறுப்பை அன்ரனி திவ்யா வகிக்கின்றார்.

வன்னிச்சமர் கிரிக்கெட் போட்டியை வருடாந்தம் நடத்த எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் போட்டி வவுனியா நகர சபை மைதானத்தில் நாளை (09) காலை ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்