தென், வட மத்திய மாகாணங்களில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

தென், வட மத்திய மாகாணங்களில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

தென், வட மத்திய மாகாணங்களில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 May, 2018 | 9:03 am

COLOMBO (News 1st) நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளது.

சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து இது தௌிவாகியுள்ளது.

நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி புத்தளம் முதல் கொழும்பு வரை அதிகரித்துள்ளதுடன் அங்குள்ள கடற்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களின் காரணமாக உற்பத்தியாளர்கள் குறித்த பிரதேசங்களை விட்டு வட மத்திய மற்றும் தென் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் உதவி சுங்கப் பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு இதனை இல்லாதொழிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்