சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குடும்பத்தோடு வௌியேறும் கிளர்ச்சியாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2018 | 4:32 pm

சிரியாவில் தாம் கடைசியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வௌியேறி வருகின்றனர்.

சிரியாவிலுள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தமது குடும்பத்துடன் வௌியேறி வருகின்றனர்.

சிரிய அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்யக் கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து வௌியேறி வருகின்றனர்.

சிரியாவின் வடக்கு பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சிரியாவின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர சிரியா இராணுவப் படை மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இடையே சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்