ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2018 | 5:08 pm

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்பு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘90 எம்.எல்’ படத்திற்கு காதல் கடிக்குதே உள்ளிட்ட 4 பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள்.

இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

இந்த படப்பிடிப்புக்கு சிம்பு மணிரத்னத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிப்பில் பிசியாக இருக்கும் சிம்பு, ஓய்வு கிடைக்கும் போது ஓவியா நடித்து வரும் ‘90 எம்.எல்’ படத்திற்கு இசை அமைப்பதற்கான வேலையிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த படத்திற்காக ‘காதல் கடிக்குதே…’ என்ற பாடல் உட்பட 4 பாடல்களுக்கு இசை அமைத்து முடித்திருக்கிறார்.

மணிரத்னம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே தான் இசை அமைக்கும் படத்திலும், சிம்பு கவனம் செலுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்