எமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

எமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

எமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 May, 2018 | 1:10 pm

COLOMBO (News 1st) 2012 ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட தூப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 22ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அன்றைய தினத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2017 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக உள்நுழைந்து அங்கிருந்த சிறைக் கைதிகள் 27 பேரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எமில் ரஞ்சன் இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளராகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்