இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 May, 2018 | 7:05 am

COLOMBO (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் , பாதுகாப்பாளர்கள் சங்கம் , சாரதிகள் சங்கம் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் ஆகிய 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளன.

தமக்கான ஊதியம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும், அதற்கான அனுமதியை வழங்குமாறும் குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ள போதிலும், அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இந்த விடயம் குறித்து இன்று ரயில்வே ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்