அகோரியாக நடிக்கும் ஜக்கிஷெரப்

அகோரியாக நடிக்கும் ஜக்கிஷெரப்

அகோரியாக நடிக்கும் ஜக்கிஷெரப்

எழுத்தாளர் Staff Writer

08 May, 2018 | 12:04 pm

பிரபல இந்தி நடிகர் ஜக்கி ஷெரப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அகோரியாக மாறியிருக்கிறார்.

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஸன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு ‘பாண்டி முனி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார்.

மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறும்போது,

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் திகில் விடயங்களை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் ‘பாண்டி முனி’.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் திகில் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான படமாக உருவாக்கியிருக்கின்றேன்.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜக்கி ஷெரப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி’ என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்