வௌ்ள முன் ஆயத்த விழிப்புணர்வு திட்டம் நிறைவு

வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம் விழிப்புணர்வு நடடிக்கை இன்றுடன் நிறைவு

by Staff Writer 07-05-2018 | 8:59 PM
COLOMBO (News 1st) வௌ்ளத்தினால் உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படுகின்ற சேதம் அதிகரித்து செல்கின்றது. ஐக்கிய நாடுகளின் தரவுகளுக்கு அமைய கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 500 இற்கும் அதிகமானவர்கள் வௌ்ளத்தினால் உயிரிழந்துள்ளனர். இதனால் வௌ்ளத்திற்கு முன் ஆயத்தம் ஆவது முக்கியமாகும். இதனை கருத்திற்கொண்டு நியூஸ்பெஸ்டின் மக்கள் சக்தி திட்டம் முன்னெடுத்த விழிப்புணர்வு நடடிக்கை இன்று நிறைவுபெற்றது. இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கம் , ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்,நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட இலங்கை உயிர்பாதுகாப்பு படை ஆகியன மக்கள் சக்தி அணியுடன் இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர் களுத்துறை மாவட்டத்தில் பனாபிடிய தெபுவன ஆகிய பிரதேசங்களிலும் மதுராவலவிலும் இன்றைய நிகழ்வுகள் இடம்பெற்றன இதன்போது வௌ்ள அனர்த்தத்திற்கு முன் மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிர்பாதுகாப்பு நுட்பங்கள் தொடர்பில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. பனாபிடிய கல்பாத விகாரையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது பின்னர் தெபுவன விகாரையில் அந்த பகுதியை சூழவுள்ள மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர். இதன்போதும் வௌ்ள நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதேவேளை மூன்றாவது நாளின் மூன்றாவது நிகழ்வு களுத்துறை மதுராவல அம்பிடிகல ஶ்ரீ சுமங்கலாராமயவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://www.youtube.com/watch?v=EQ_NyLh5nRU