ரஷ்யாவின் ஜனாதிபதியாக புட்டின் பதவியேற்பு

புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக 4ஆவது தடவையாக பதவியேற்பு

by Staff Writer 07-05-2018 | 3:30 PM
ரஷ்யாவின் ஜனாதிபதியாக  நான்காவது தடவையாக விளாடிமிர் புட்டின் சற்று நேரத்திற்கு முன்னர் க்ரெமிலினில் பதவியேற்றுள்ளார். இதற்கமைய அடுத்த 6 வருடங்களுக்கு அவர் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். 65 வயதான விளாடிமிர் புட்டின் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 76 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் பதினெட்டு வருடமாக அவர் வகித்து வந்த நாட்டின் தலைவர் பதவியை தொடரவுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ரஷ்யா முழுவதும் 19 நகரங்களில் கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 19 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.