லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருது திருடப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருது திருடப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருது திருடப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 May, 2018 | 2:45 pm

COLOMBO (News 1st) காலஞ்சென்ற பிரபல இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு சொந்தமான சர்வதேச விருது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றின் போது சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி லேஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருது அன்னாரின் பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்ததுடன், இறுதிக் கிரியைகளின் போது அது காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், கடுவளைக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் பொருட்கள் வைக்கப்படும் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இந்த விருது கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்